இந்தியாவுக்கு புறப்பட்டது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

0
192

டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 மகளிர் உலகக்கிண்ண டி20 போட்டிக்கான இலங்கை அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. உலகக்கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் 15ம் திகதி தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக இலங்கை அணி இந்தியாவுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ஒருநாள் தொடர் எதிர்வரும் 15ம் திகதியும், டி20 தொடர் எதிர்வரும் 22ம் திகதியும் நடக்கிறது. அனைத்து போட்டிகளுமே ராஞ்சியில் நடைபெறுகிறது.

இதற்காக சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி:-

சஷிகலா சிறிவர்தன (அணித்தலைவர்), சமரி அத்தப்பத்து (துணைத் தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, உதேஷிகா பிரபோதனி, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி.

LEAVE A REPLY