இலங்கையில் 29 ஆவது சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய கடமைகளைப் பொறுப்பேற்றார்

0
175

இலங்கையில் 29 ஆவது சட்டமா அதிபராக ஜயந்த ஜயசூரிய இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொழும்பு – அளுத்க்கடை நீதிமன்ற கட்டத்தொகுதியில் அமைந்துள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஜயந்த ஜயசூரிய உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப் பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜயந்த ஜயசூரிய சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டராக ​ கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

-NF-

LEAVE A REPLY