ஞானசார தேரருக்கு எதிராக 50 க்கும் மேற்பட்ட வழக்குகள்

0
214

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நாட்டின் பல்­வேறு நீதி­மன்­றங்­க­ளிலும் சுமார் 50க்கும் மேற்­பட்ட வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் இவ் வழக்­கு­க­ளி­லி­ருந்து அவர் விடு­தலை பெறு­வ­தற்கு பல ஆண்­டுகள் செல்லும் என்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார்.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக ஹோமா­கம நீதி­மன்றில் 3 வழக்­கு­களும் கோட்டே நீதி­மன்றில் 3 வழக்­கு­களும் கொழும்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் 2 வழக்­கு­களும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஒரு வழக்கும் என ஒன்­பது வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், அளுத்­கம சம்­ப­வங்கள் தொடர்பில் மாத்­திரம் களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்றில் 44 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

ஹோமா­கம நீதி­மன்றில் சந்­தியா எக்­னெலி­கொ­டவை அச்­சு­றுத்­திய வழக்கில் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஞான­சார தேரர் ஏனைய வழக்­குகள் தொடர்பில் எதிர்­கா­லத்­திலும் விளக்­க­ம­றி­ய­லுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறித்த சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

-Vidivelli-

LEAVE A REPLY