முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்

0
117

கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் முஜிபுர் ரஹ்மான் முன்னெடுக்கும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு குவைட்டில் இயங்கும் ஐ.தே.க.வினர் உதவிகளை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரளவுக்கும் குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY