மயங்கி விழுந்தார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்: காரணம் என்ன?

0
133

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உயர் ரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் 2001–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 72).

முஷ்ரப் ஆட்சியில் இருந்த காலத்தில் சிவப்பு பள்ளிவாசலில் 2007 இல் அரசுத் தரப்பு படைகளுக்கும் பள்ளிவாசல் ஆதரவாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதலில் சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முஷரப் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முஷரப் இன்று அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக கராச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக முஷரப் மயங்கி விழுந்திருக்கலாம் என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர்களுள் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் உடல்நிலையை காரணம் காட்டி பல்வேறு முறை முஷரப் விசாரணையில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY