சிரியாவில் 5 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டு போரில் பலி எண்ணிக்கை 4¾ லட்சம்

0
141

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக தொடர்ந்து 5-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த உள்நாட்டுப்போர் அந்த நாட்டை நிர்மூலம் ஆக்கி வருகிறது.

இதுவரை அங்கு உள்நாட்டுப்போரில் 4 லட்சம் பேர் நேரடியாக கொல்லப்பட்டுள்ளனர். 70 ஆயிரம் பேர் அடிப்படை வசதிகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.

5 ஆண்டுகளில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலி என்பது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளி வருகிற ‘கார்டியன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY