அரசியல்வாதிகள் வீடுவீடாக வாக்கு கேட்டு வருவது போல், மக்கள் குறைகளையும் வீடுவீடாக சென்று நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும்: ஷிப்லி பாறூக்

0
214

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வீடுவீடாக வாக்குகள் கேட்டு வருவது போல். மக்கள் குறைகளையும் வீடுவீடாக சென்று மக்களது குறைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கூறினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடிச் சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்டம் தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறன மக்கள் குறைகளை கேட்கும் நடமாடும் சேவை நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் பிள்ளையார் கோவில் வீதியில் வியாழக்கிழமையன்று (11.02.2016) காலை 09.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணி வரைநடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நல்ல செயற்திட்டத்திற்கு பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் திருமதி. P. சார்ள்ஸ் அவர்களும்இஆரையம்பதி உதவி பிரதேச செயலாளர் திருமதி. டு. பிரசாந்தன் அவர்களும்இமாவிலங்குதுறை கிராம சேவாகர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய இவ்வாறான செயற்பாட்டினால் அநேகமான விடையங்களை திர்க்க முடியும் என்று பாராட்டி தங்களுடைய பூர்ண ஒத்துழைப்பையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்த நல்லதோர் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தேர்தல் காலங்களில் வீடுவீடாக சென்று வாக்குகள் கேட்டு வருகின்ற அரசியல்வாதிகளை தேர்தல் முடிந்த பிற்பாடு தேடிசெல்கின்ற கலாச்சாரம் மாறாவேண்டும், அரசியல்வாதிகள் வீடுவீடாக சென்று மக்களது குறைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு முன்வரவேண்டும்.

தற்போது மலர்துள்ள நல்லாட்சியில் மக்கள் எதனை அனுபவிக்கின்றார்கள், அவர்களுடைய பிரச்சனைகளை தேவைகள் ஓரளவேனும் தீர்க்கப்பட வேண்டும் இல்லையெனின் நல்லாட்சி என்று கூறுவதில் எவ்வித பயனுமில்லை.

கடந்த ஆட்சி காலங்களில் இவ்வாறான செயல்படுகளை செய்யமுடியாமல் இருந்தது ஆனால் தற்போது அனைத்தையும் சுதந்திரமாக செய்யக்கூடியதாக இருக்கின்றது அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் நாங்கள் எவ்வித இனவேறுபாடுகளின்றி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் மேற்கொண்டு மக்களது குறைகளை நேரடியாக இனங்கண்டு அதைஅரசாங்க ரீதியாகவும், தனியார் ரீதியாகவும் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் தீர்பதற்கு முன்முனைபுக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அரச நிறுவனங்களில் உடனடியாக தீர்க்க வேண்டிய தமது தேவைகளை பல நாட்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு தீர்க்கப்படுகின்றது, இது ஏன் அவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை உயர் அதிகாரிகளிடம் கேட்பதற்குமுன் முன் மக்களாகிய உங்களுடைய நிலைமையினை நேரடியாக அறியவேண்டும் அதற்காக நான் தெரிவுசெய்த ஒரு வழிதான் இந்த வீதிக்கு ஒருநாள் என்ற நடமாடும் நிகழ்ச்சி திட்டமாகும்.

அந்த வகையில் மக்களிடம் குறைகளை கேட்டறியும் நிகழ்வும் அதனைத்தொடர்ந்து இப்பிரதேசத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு சென்று அவர்களுடைய நிலைமைகளை கேட்டறிய இருக்கின்றோம்..

அந்தவகையில் இப்பிரதேசத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைபதனூடாக எங்களால் முடிந்தளவு இங்கு சமூகமளிதுள்ள அதிகாரிகளினூடாக தீர்வுகளை பெற்றுத்தரமுடியும் சில விடயங்களை காலம்தாழ்த்தியாவது தீர்வை பெற்றுத்தர முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வீடுவீடாக வாக்குகள் கேட்டுவருவதுபோல்,மக்கள் குறைகளையும் வீடுவீடாகசென்றுமக்களதுகுறைகளைஅறிந்துஅதனைநிவர்த்தி செய்வதற்கு முன்வரவேண்டும் என கிழக்குமாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லிபாறூக் கூறினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லிபாறூக் அவர்களினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடிச் சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்டம் தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக நடை பெற்றுவருகின்றது.  இவ்வாறனமக்கள் குறைகளைகேட்கும் நடமாடும் சேவை நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் பிள்ளையார்கோவில் வீதியில் வியாழக்கிழமையன்று (11.02.2016) காலை 09.30 மணிதொடக்கம் மாலை 04.30 மணிவரைநடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்பொறியியலாளர் ஷிப்லிபாறூக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நல்ல செயற்திட்டத்திற்கு பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் திருமதி. P. சார்ள்ஸ் அவர்களும்,ஆரையம்பதி உதவிபிரதேச செயலாளர் திருமதி. டு. பிரசாந்தன் அவர்களும், ,சமுர்த்திஉத்தியோகஸ்தர், மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து  சிறப்பித்துமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய இவ்வாறான செயற்பாட்டினால் அநேகமான விடையங்களை திர்க்கமுடியும் என்று பாராட்டி தங்களுடைய பூர்ண ஒத்துழைப்பையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

மன்சூர் அஹ்மத்

 

LEAVE A REPLY