நியு ஸ்டார் கழகத்தினால் சமூக சேவையாளர் தேஷகீர்த்தி முனாஸ் பாராட்டிக் கௌரவிப்பு

0
150

அட்டாளைச்சேனை கோணாவத்தையில் தளத்தினைக்கொண்டிருக்கும் சுமார் 30 வருடங்கள் பழமையான நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தி பெற்றவர்கள், சாதாரண தரத்தில் திறமைச் சித்திபெற்றவர்கள், உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் சென்றவர்கள், சமூக சேவையாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கெளரவிக்கப்பட்டனர்.

கழகத்தின தலைவரும், சமூக சேவையாளரும், அதிபருமான எம்.ஐ.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை சுகாதார சுதேச, சிறுவர் நன்னடத்தை, சமூக சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸிம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெமீல், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட இவ்விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும், அக்கரைப்பற்று கல்முனை சாரணர் மாவட்ட உதவி ஆணையாளரரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும், சுகாதார அமைச்சரின் அந்தரங்கச் செயலாளரும், பிரபல சமூக சேவையாளருமான எஸ்.எல்.முனாஸ் நிகழ்வின் பிரதம அதிதியால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பலருக்கு பொன்னாடைபோர்த்தி கெளரவிக்கப்பட்டன.

.

சப்னி

LEAVE A REPLY