8 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி காணும் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயம்

0
207

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தில் 8 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி 2016 இவ்வாண்டு நாளை 12-02-2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ.ஜீ.எம்.ஹகீம் தெரிவித்தார்.

றூமி சிவப்பு ,எமெரல்ட் பச்சை ,சபயர் நீலம் மூன்று நிறங்களையும், இல்லங்களின் பெயர்களையும் கொண்டு இடம்பெறவுள்ள மேற்படி இல்ல விளையாட்டுப்போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,மீள்குடியேற்ற மற்றம் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருடான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சேகு அலி,காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.சீ.எம்.பதுர்தீன் உட்பட கல்வியலாளர்கள்,ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

LEAVE A REPLY