மட்டு. சுகாதார அலுவலகப் பிரிவில் 22 பேருக்கு டெங்கு

0
172

மட்டக்களப்பு சுகாதார அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 22 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் திருமதி பாமினி அச்சுதன் தெரிவித்தார்.

நாவற்குடா, புதூர், திருச்செந்தூர், லேடி மெனிங் றைவ் வீதி ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையும் வீடுகளில் சோதனை நடவடிக்கையும் நாவற்குடா, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே அவர் இதனை கூறினார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், இலங்கை விமானப்படையினர் ஆகியோரின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(Tamilmirror)

LEAVE A REPLY