குடியுரிமை பறிப்பு தொடர்பில் பிரான்ஸில் புதிய சட்டம்

0
198

பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரெஞ்சு மக்களின் குடியுரிமையை பறித்தல் எனும் இரண்டு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வைக்கப்படவுள்ளது.

ஆளும் சோஷலிசக் கட்சியில் உள்ள பலர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேவையான பெரும்பான்மையை பெறுமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

LEAVE A REPLY