ஜேர்மன் ஒஸ்ரியாவுக்கு ஜனாதிபதி பயணம்!

0
87

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இதன்போது முக்கியத்துவம் வாய்ந்த இரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பிரதி வெ ளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நேற்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெ ளியிட்ட அவர், இலங்கையில் முதலீடு செய்யும் முன்னணி நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நீண்ட கால உறவுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY