காத்தான்குடியில் இரத்ததான நிகழ்வு – 2016

0
251

காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக “உதிரம் கொடுத்து உயிர் காப்பதனூடாக கலாசார விழுமியங்களைக் கொண்ட நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14.02.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.07.00 மணி முதல் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப்பாரிய பணியில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயர் விபரங்களை காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நேரடியாக அல்லது 0719226621ஃ0776226621 அழைப்பினை ஏற்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என பிரதேச கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரியும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய எம்.ஐ.எம்.எம்.மஹ்பூழ் தெரிவித்தார்.

LEAVE A REPLY