காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும்

0
174

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு ஒன்றின் ஆய்வு கூறியுள்ளது.

வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு கிழக்கு நோக்கி உயரத்தில் வீசும் காற்றின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி வரும் விமானங்களின் பயண நேரம் குறைந்தாலும், எதிர்த்திசையில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நேர அதிகரிப்பால் வருடாந்தம் விமானங்கள் மேலதிகமாக இரண்டாயிரம் மணிநேரம் பறக்க நேர்வதுடன், எரிபொருட் செலவும் பயண சீட்டு கட்டணமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY