பாகிஸ்தானில் கார் மீது Gas டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பலி

0
193

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நான்கானா சாகிப் நகரின் அருகே இன்று கார் மீது gas டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஷேக்புரா அருகேயுள்ள மானாவாலா பகுதியில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து தீக்கோளமாக தெறித்து சிதறிய பெட்ரோல் அவ்வழியாக பத்து குழந்தைகளுடன் சென்ற சைக்கிள் ரிக்‌ஷாவையும் சாம்பலாக்கியது.

சாலையோரம் உள்ள கடைகளின் மீது பெட்ரோலுடன் கூடிய தீப்பிழம்புகள் சிதறி தெறித்தன. இதனால் அங்கிருந்த மக்கள் பீதியுடன் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இறந்த சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப்போய் கிடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படுகாயமடைந்த 12 பேர் அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீப்புண் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY