கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
153

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தேவாபுரம் முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் வீதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாபுரம் வீதியில் வைத்து 3800 மில்லி கிராம் கஞ்சாவுடன் 25 வயதான நபரொருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ததோடு கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY