ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

0
103

இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரான இளவரசர் செய்த் ராத் அல் ஹுசேய்ன், இன்று(10) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றார்.

தமது இலங்கைக்கான விஜயத்தில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிலருடனும் மனித உரிமைகள் ஆணையாளர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி பிரதேசங்களுக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY