தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை 2 ஆம் இடத்தில்!

0
259

இந்தியாவின் குவாத்தி நகரில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் மொத்தமாக 64 பதக்கங்களைப் பெற்று இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

இலங்கை அணி 11 தங்கம், 30 வெள்ளி, 23 வெண்கலப்பதக்கத்தை பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. அவ்வகையில் முதலாவது இடத்திலுள்ள இந்திய அணி 58 தங்கம், 20 வௌ்ளி, மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி வீரர் மெத்திவ் அபேசிங்க, நீச்சல் போட்டியில் தன் ஆதிக்கத்தினை செலுத்தியதுடன் மொத்தம் 5 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான நீச்சல் போட்டியில் நீச்சல் வீரங்கனை கிமிகோ ரஹிம் மூன்று தங்கப்பதக்கம் பெற்று தெற்காசிய போட்டியில் சாதனையை நிலைநாட்டியுள்ளமை விசேட அம்சமாகும். கிமிகோ ரஹிம் 50 மீற்றர் நீச்சல் போட்டியில் 26.49 நிமிடத்தில் வெற்றி பெற்றார். இதேபோட்டியில் இவரது சகோதரி மிச்சிக்கோ ரஹிம் 27.40 நிமிடத்தில் முடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நீச்சல் துறையில் இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டு வரும் வகையில் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். நீச்சல் வீர வீராங்கனைகள் தற்போது இடம்பெற்றுவரும் போட்டிகளில் மிகவும் அதீத திறமைகளை வௌிப்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகன்றனர். அவ்வகையில் பயிற்சியாளர்களுக்கும் வீர வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு உழைப்பு ஆகியன பாராட்டப்பட வேண்டியது.

எனவே எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வீர வீராங்கனைகளின் பயிற்சிக்காக விசேட நீச்சல் பயிற்சிக் குளமொன்றும் அமைக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY