எமது இணையதள செய்தி தொடர்பாக…

0
210

‘நேற்றுவரை என் மதிப்புக்குரியவராக இருந்த கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அவர்களுக்கு ஒரு சிறியவனின் திறந்த மடல்’ எனும் தலைப்பில் எமது இணையதளத்தில் வெளியான செய்தி தவறானது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

குறித்த செய்தி எமது இணைய குழவிலுள்ள ஒருவரால் பதிவேற்றப்பட்ட போதிலும் அது உறுதிப்படுத்தப்படாத செய்தி என்பதால் இன்று காலை அது எமது இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

இருந்தபோதும் குறித்த செய்தியால் பாதிக்கப்பட்ட சகோதரரிடம் இதை தெரியப்படுத்துவதுடன் அவருக்கு இதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் எமது இணைய குழு மன்னிப்பையும் கோருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஆசிரியர்,
ஸாஜில் மீடியா நெட்வேர்க்

LEAVE A REPLY