NFGG மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

0
83

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வு வைபவங்கள் காத்தான்குடியில் பல்வேறு இடங்களில் மிகவும் விமர்சையாக நடைபெற்றன.

நல்லாட்சிக்கான தேசிய முனன்ணியின் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட சுதந்திர தின நிகழ்வு கடந்த 04.02.2016 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் NFGG யின் கிழக்குப் பிராந்திய காரியாலய வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.

மகளிர் அணியின் சிரேஸ்ட உறுப்பினர் பௌமியா சரீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஜனாபா பர்சானா இஸ்லாஹி அவர்களும் NFGG யின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மட் அவர்களும் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றினர்.

அத்தோடு சஹானா,மற்றும் நிப்றாஸா ஆகியோரின் பாடல்களும், நுஸ்றாவின் கவிதையும் இடம் பெற்றது.

சுமார் 500க்கும் அதிகமான பெண்கள் இந்கிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். NFGG ஆண்களை மாத்திரம் மையப்படுத்தி நடாத்திய இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வு அதே தினம் காலை 9.30 மணிக்கு NFGG யின் கிழக்குப் பிராந்திய காரியாலய வளாகத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.

1a8bbeab-ddb0-4477-ae4b-8f453ee8acba (1) 1a8bbeab-ddb0-4477-ae4b-8f453ee8acba 1e31ed6f-f10d-48bc-a9b7-97f8ad72eea1 4cd28d32-1bf1-495c-8a54-7e1dd12bd736 6e64eb43-4251-418d-ad71-685bcf259826

LEAVE A REPLY