ஜேர்மனியின் சோகம் புகையிரதங்கள் நேருக்குநேர் மோதி பலர் பலி..

0
177

ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

Rosenheim and Holzkirchen ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் ஒரு ரயில் தடம்புரண்டது. மேலும் அதன் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது. உடனடியான சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் அவசர ஊர்தி மற்றும் உலங்குவானூர்தி மூலம் ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை.

எனினும் 100 பேர் காயமடைந்திருக்கலாம் என்று100 பேர் காயமடைந்துள்ளனர், பலர் பலியாகியிருக்கலாம் என்றும் பாவாரியா பகுதி பொலிசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் சம காலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய விபத்து இது என்றும் கூறப்படுகிறது.

bavaria_accie01 bavaria_accie03 bavaria_accie04

LEAVE A REPLY