உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகளிர் சங்கங்களிலிருந்து உருவாக்க நாம் அனைவரும் தயராக வேண்டும் : ஐ.எல்.எம்.மாஹிர்

0
147

நாம் அனைவரையும் எதிர்நோக்கி வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பங்களிப்பு கூடுதலாக தேவையாகவுள்ளது. பெண்கள் என்றால் வீட்டு குசினியில் மட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்க கூடாது. எந்த இடத்தில் பார்த்தாலும் இன்று பெண்கள்தான் முன்வருகின்றார்கள்.

பெண்களின் பிரச்சினைகளை உரிய இடத்தில் சொல்லக் கூடிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்தி தரவுள்ளோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறை கிழக்கு புளக் ஜே அல்-மபாஸா மகளிர் சங்கத்திற்கு மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

சம்மாந்துறை அல்-மபாஸா மகளிர் சங்க தலைவி ஏ.கே.ஜலீலா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை ஹிஜ்ரா திவிநெகும வங்கியின் உதவி முகாமையாளர் ஏ.சீ.எம்.நஜீப், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், மகளிர் சங்களின் பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளுராட்சி மன்றம் என்றால் ஒரு ஊரின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்ற ஒரு சபையாக காணப்படுகின்றது. அந்த சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவையாகவுள்ளது.

பெண்களின் பிரச்சினைகளை சபையில் கொண்டு சென்று பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை தீர்க்க சபைக்கான தேர்தல் மிக விரைவில் வரவுள்ளது. அந்த தேர்தலில் பெண்களுக்கும் 25 சதவீதமான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள அனைத்துப் பெண்களுக்குமான சட்டம்.

இன்று சனத்தொகையை எடுத்துக்கொண்டால் ஆண்களைவிட பெண்கள் இலங்கையில் கூடுதலாகவுள்ளனர். ஆனால் உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பவற்றில் பார்த்தால் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றன இந்த நிலையை மாற்றுவதற்காக உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பென்களுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிட தயங்குவார்கள், எங்களுடைய கலாச்சாரத்திற்கு கஸ்டம், பிரச்சினைவரும் என்பதால் எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு சலுகை தந்துள்ளார்கள் பெண்கள் தேர்தலில் போட்டியிடாமல் உள்ளுராட்சி மன்றத்தினை கைப்பற்றுகின்ற கட்சியினால் நியமிக்கப்படவுள்ளனர். ஆகையால் இப்போதிருந்தே சிறந்த ஆளுமைமிக்க பெண்களை மகளிர் சங்கங்களிலிருந்து உருவாக்க நாம் அனைவரும் தயராக வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

எம்.எம்.ஜபீர்-

LEAVE A REPLY