இலங்கை அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா

0
293

ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக இருந்தது. அணித்தலைவர் இஷான் கிஷான் 7 ஓட்டங்களிலும், ரிஷப்பன்ட் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 3வது விக்கெட்டுக்கு அமோல் பிரித்சிங்– சர்பிராஸ்கான் ஜோடி நிதானமாக விளையாடியது.

இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். சர்பிராஸ்கான் 59 ஓட்டங்களும், அமோல் பிரித்சிங் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் வந்த சுந்தர் 43 ஓட்டங்களும், ஜாபர் 29 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தினர்.

அடுத்து வந்த மகிபால் (11), மயாங்க் டாகர் (17), ராகுல் பாதம் (1) வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணி சார்பில், அசிதா பெர்னாண்டோ சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார, நிமேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

LEAVE A REPLY