மஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலைக்கு NFGG யினால் இலவச சீருடைகள் விநியோகம்

0
136

மஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த 07.02.2016 அன்று மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையில் கல்விபயிலும் 35 மாணவர்கள் இந்த சீருடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஹிழ்றியா பாலர் பாடசாலையின் தலைவர் MIM. ஹகீம் அவர்களின் தலைமையல் நடை பெற்ற இந்நிகழ்வில் I. அப்துல் றஊப், MM. லெத்தீப், MHM. றஸ்ஸாக், IM. அஸனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், ‘தான் பிறந்து வளர்ந்த இப்பிரதேச மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இன்னும் பல வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க விருப்பதாகவும் தெரிவித்தார்.

7ee458e6-fd68-47a7-8ada-3c928abc4603 2254e9a3-9160-4eb0-a231-bf8d84effeb2 22612515-b460-44e0-871f-4492eea6c1c9 b44f1d13-88ab-462e-94c4-afb4aba52714 cda34a0f-754f-4413-80e4-d7ce5b3bf80e f5d9dc93-786a-4cfe-b20a-952e148df9ec fcfd9d2c-0336-482f-9336-a336ebf01650

LEAVE A REPLY