ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூகினியா நாட்டில் நிலநடுக்கம்

0
118

ஆஸ்திரேலியா அருகேயுள்ள பப்புவா நியூகினியா நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பீதியடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா அருகேயுள்ள மிக சிறிய தீவு நாடு பப்புவா நியூகினியா. இங்குள்ள பயுகெயின் வில்வே தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பங்குனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. அப்போது பொதுமக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். பூமி குலுங்கியதால் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

அங்கு 6.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பயுகெயின் வில்லே தீவில் அராவா நகரில் இருந்து 104 கி.மீட்டர் தொலைவில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருந்தும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சாவு குறித்தோ, சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY