எரிபொருள் விலை குறைந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது :அஜித் பி பெரேரா

0
163

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைவதற்கமைய மின் கட்டணங்களை குறைக்க முடியாது என பிரதி மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் குறைந்தளவே எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்த அவர், நீர் மூலம் 50 வீதமும் நிலக்கரி மூலம் 40 வீதமும் மின் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ,எரிபொருள் விலை குறைவடைந்திருப்பதற்கமைய மின் கட்டணங்கள் குறைக்கப்படாதது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின் உற்பத்திக்கான செலவுகளை குறைப்பது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.மின்சாரப் பாவனையை முகாமைத்துவம் செய்வதற்கும் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ளன. தற்காலிக உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இங்கு விலைகளில் மாற்றம் செய்ய முடியாது.

எமது நாட்டின் மின்கட்டணங்கள் எரிபொருள் விலைகளில் தங்கியிருக்கவில்லை. காற்று மற்றும் சூரிய சக்தி என்பன ஊடாக மின் உற்பத்தி செய்ய கூடுதல் கவனம் செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் காற்று மூலம் 375 மெகா வேர்ட் மின்உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது .

கடந்த காலத்தில் மின்கட்டணங்கள் குறைக்கப்பட்டன. நாம் மின் கட்டணங்களை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY