வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்யும் பஸ் வண்டிகளிடமிருந்து ரூ. 02 இலட்சம் அபராதம், 10 வருட சிறை

0
168

வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்யும் பஸ் வண்டிகளிடமிருந்து 2 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 10 வருட சிறைத் தண்டனை விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பீ.​ேஹமச்சந்திர தெரிவித்தார். வீதி அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான அபராதத்தை அதிகரிப்பதற்கான யோசனை விரைவில் போக்குவரத்து அமைச்சரினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரம் வீதி அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு 2 ஆயிரம ரூபாவே அபராதம் விதிக்கப்படுகிறது. அல்லது 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

கூடுதலாக கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலே அனுமதிப்பத்திரமின்றி கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.சுமார் 50 பஸ்கள் இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பஸ்களை பிடிக்க சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY