துருக்கி அருகே இருவேறு படகு விபத்துக்களில் 33 அகதிகள் பலி

0
113

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்யும் அவர்கள் கிரீஸ் வழியாக துருக்கி வந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு வரும் அகதிகள், படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகின்றன.

இந்த நிலையில், துருக்கியில் இருந்து ஏகியன் கடல் வழியாக கிரீஸ் செல்ல முயன்ற அகதிகள் இருவேறு விபத்துக்களில் சேர்த்து மொத்தம் 33 பேர் பலியானதாக துருக்கி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் படகு மூழ்கியதில் 22 பேரும் இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏகியன் கடற்கரை அருகே படகு மூழ்கியதில் 11 பேரும் என மொத்தம் 33 பேர் பலியாகினர். இந்த இரு படகில் சென்றவர்களும் கீரீஸ் தீவான லெஸ்பாஸ் செல்ல முயன்றனர் என்று துருக்கி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY