கோறளைப்பற்று மேற்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு

0
81

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016 ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத்தெரிவும் நேற்று (08) திங்கட்கிழமை மாலை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மன்டபத்தில் இடம் பெற்றது.

பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னால் தலைவர் எஸ்.எம்.நப்ராஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான கலாராணி ஜேசுதாசன்,திருமதி நிசாந்தி அருள் மொழி, பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத்,கோறளைப்பற்று மேற்கு இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் திவியநாதன் உள்ளிட்ட பிரதேச சம்மேளனத்தின் முன்னால் நிருவாக சபை உறுப்பினர்கள் முக்கிய நபர்கள் கலந்து கொண்டு 2016ஆம் ஆண்டுக்காண கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் புதிய நிருவாகத்தெரிவினை மேற்கொண்டனர்.

இத்தெரிவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக இளம் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் போட்டியின் அடிப்படையில் பிரதேசத்தின் அதிக படியான இளைஞர்களின் அபிமானத்தை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

நிருவாகத்தெரிவின் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

“ தற்போது நாட்டில் நல்லாட்சி மலர்கின்றது இதற்கு அதிகபடியான பங்களிப்பு செய்தவர்கள் இளைஞர்கள் அந்த வகையில் இந்நாட்டின் தேசிய வளமாக இளைஞர்கள் பார்க்கப்படுகின்றனர் என்பதனை நாம் நினைவூட்டுகின்றோம்.

கடந்த காலங்களில் இளைஞர்களை கனவு உலகில் மிதக்க செய்து சர்தேசத்திற்கு படம் காட்டியவர்கள் இன்று எம்மவர்கள் மத்தியில் இல்லை மாயமாக மறைந்து விட்டனர்.

அதற்கு மாறாக ஊழல், லஞ்சம் என்று ஏணி படி ஏறி இறங்கி வருகின்றனர். வெளிப்படை மற்றும் உண்மை தன்மையான அரசாங்கம் எமக்கு கிடைத்துள்ளது. அதிலும் விஷேடமாக இந்நாட்டில் இளைஞர்களின் நலன் பேனும் தேசிய நிருவனமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நிகழ்கின்றது.

மேலும் எமது மட்டக்களப்பு மாவட்டம் தமிழ்,முஸ்லிம்,சிங்கள,கிறிஸ்தவம் என பலதரப்பட்ட சமயங்களையும் கொள்கைகளையும் பின்பற்றும் இளைஞர்கள் வாழும் மாவட்டமாகும். அந்த வகையில் இந்நாட்டில் இளைஞர்களினது ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக இளைஞர் கழகங்களை சிறப்பாக வழி நடாத்தி செயற்பட்டு வரும் மட்டு பிராத்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உள்ளமை பெருமை படத்தக்க விடயமாகும்.

மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் அவர்களினதும் இளைஞர் சேவை அதிகாரிகளினதும் வழிகாட்டலில் நாம் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக செயற்பட்டோம் எதிர்காலங்களிலும் செயற்படவுள்ளோம்.

இறைவனின் உதவியோடு எமது பிரதேச இளைஞர்களின் ஆதரவுடன் நான் இம் முறை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

கடந்த காலங்களில் நாம் விட்ட பிழைகளை சீரமைத்து இவ்வாண்டில் இலங்கையில் உள்ள பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களில் முதன்மையான இளைஞர் கழக சம்மேளனமாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளனம் நிகழ வேண்டும் என்பதும் அக்கௌரவத்தினை எமது பிரதேசத்தின் இளைஞர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தெரிவித்தார்.

மேலும் அவர் வாருங்கள் இளைஞர்களே மைத்திரி யுகத்தில் புதிய யுகம் படைத்து உலகை வெல்வோம் என பிரதேச இளைஞர்களுக்கு அன்பான அழைப்பினையும் விடுத்தார்.

-வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY