இரத்த அழுத்தம் குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

0
358

இரத்த அழுத்தம் உடலில் குறைவாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து, உடனே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளைப் பெற்று வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் முதன்மையானது தலைச்சுற்றல் ஏற்படும். அதுவும் நீண்ட நேரம் உட்கார்ந்து எழும் போது, நீண்ட நேரம் நின்றால் மற்றும் உணவு உட்கொண்ட பின் போன்ற தருணங்களில் ஏற்படும். இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, மூளையில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்.

இதன் காரணமாக அடிக்கடி மயக்கம் வரக்கூடும். உங்களுக்கு இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள். உடலுறுப்புக்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தால், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். அதில் ஒன்று தான் மங்களான பார்வை.

உங்களுக்கு அடிக்கடி படபடப்பு ஏற்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்தியுங்கள். இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது, வியர்வை அதிகமாக வெளிவரும். உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறினால், உடனே அதற்கான காரணம் என்னவென்று மருத்துவரை அணுகி கேளுங்கள்.

LEAVE A REPLY