ஒருநாள் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் மக்கலம்

0
205

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 159 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 246 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

247 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 55 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு ஓய்வு பெற போவதாக நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவர் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டியாக இன்று இருந்தது.

தனது கடைசி ஒரு நாள் போட்டியில் மக்கலம் 47 ஓட்டங்களைக் குவித்தார். 27 பந்துகளை சந்தித்து 6 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்களுடன் இந்த ஓட்டப் பெறுதியை மக்கலம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கலம் 260 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6083 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 5 சதமும் அடங்கும். அதிகபட்சமாக 166 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு மக்கலம் சர்வதேச போட்டியில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

மேலும் அவுஸ்திரேலியாவுடனான தொடரை 2-1 ரீதியில் நியூசிலாந்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY