பட்டிப்பளை பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு

0
180

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் வேலையற்றிருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு திங்கட்கிழமை 08.02.2016 பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக திறன் விருத்தி, மனிதவள அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் பட்டிப்பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர். புதுக்குடியிருப்பு தொழிநுட்ப கல்லூரி, மட்டக்களப்பு கனேடிய உலக பல்கலைக் கழக சேவை நிறுவனம், கொக்கட்டிச்சோலை தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் வளவாளர்களினால் கற்கை நெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

வேர்ள்ட் விஷன் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனம் இத்திட்டத்திற்கு உதவியிருந்தது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பட்டிப்பளை உதவிப் பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வளவாளர்கள், வேள்ட்விஸன் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY