சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதியா பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

0
139

சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதியா பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மற்றும் கிரிக்கட் சுற்றுப் பேட்டி நேற்று (7) வெலிவோரியன் எம்.எஸ்.காரியப்பர் பாடசாலை மைதானத்தில் அல்-ஹிலால் அஹதியா பாடசாலையின் உப தலைவர் மௌலவி ஏ.எம்.ஏ.சாமில் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களை எதிகாலத்தில் சிறந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் சிறந்த இஸ்லாமிய கலாச்சாரத்தினை பேனும் வகையில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மௌலவி எல்.றிப்னாஸினால் தலைமைத்துவப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் அல்-ஹிலால் அஹதியா பாடசாலையின் செயலாளர் ஏ.ஜே.எம்.இம்தாத், அல்-ஹிலால் அஹதியா பாடசாலையின் நிர்வாகத்தினர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எம்.எம்.ஜபீர்-

LEAVE A REPLY