தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதை மகிந்த ராஜபக்ச எதிா்அணி இனக் குரோதத்தை விதைக்கின்றது :சஜித் பிரேமதாச

0
195

கடந்த வாரம் நடைபெற்ற 68வது சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதற்காக எதிா்க்கட்சி கூட்டு அணியினா் அதாவது ராஜபக்ச அணியினா் சிங்கள மக்கள் மத்தியில் இனக்குரோத விசம பிரச்சாரங்களை விதைக்கின்றனா்.

கடந்த 30 வருடகால யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே தேசிய கீதம் தமிழில் பாடாவிட்டாலும் அன்று இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த டி.எஸ் சேனாநாயக்க, அநாகரிக்க தர்மபால, பொன்னம்பலம், அருனாச்சலம், அறிஞா் சித்திலெப்பை, டி.பி ஜாயா போன்றோா்கள் இனைந்து தான் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்தாா்கள். அவா்கள் அன்று சுதந்திரம் கேட்டு போராடும் போது ஒருபோதும் தமிழ் முஸ்லீம் பௌத்தம் என பிரித்து சுதந்திரம் கேட்கவில்லை. அப்போதைய காலத்திலும் தேசிய கிதம் தமிழில் பாடப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழில்தான் தேசிய கீதம் பாடப்பட்டு வருகின்றது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா்.

நேற்று முன்தினம் (7)ஆம் திகதி ஹம்பாந்தோட்டை லுனுகமுவகிரவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் வாழும் பௌத்த மக்கள் தேசிய கீதத்தினை சிங்களத்தில் பாடப்படுகின்ற வசனங்களது கருத்துக்களை தமிழ் பேசும் மக்களும் தமிழ் மொழிபெயா்ப்புடன் பாடப்பட்டால்தான் அந்த கீதம் முற்றுப்பெறும்.

ஆனால் விமல் வீரவன்ச, உதயன் கம்மன்பில முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போன்றவா்கள் மேடை போட்டு புதிய இளம் சமுகத்தினா் மத்தியில் ஏதோ தமிழ் பேசும் சமுகத்தினருக்கு தமிழ் ஈழத்தை வழங்கி விட்டோம் என இனக்குரோததினை விதைக்கின்றனா். இவா்களது அரசியல் இருப்பை வைத்துக் கொள்ளவே இவ்வாறு பௌத்த மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனா்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்வில போன்றோா்கள் இந்த நாட்டில் தமிழ், முஸ்லீம், பறங்கியா்,மலாயா் சமுகங்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்ற போா்வையில் உள்ளனா். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கு சமமான உரிமை உள்ளது. தமது மொழி, உரிமைகள் சகலதும் அனுபவிக்கின்ற உரிமைகள் அரச யாப்பில் உள்ளது. தேசிய கீதம், கனடா, பிராண்ஸ், ஜோ்மன், தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தத்தமது நாட்டு மொழி பொதுவாக ஆங்கில மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுகின்றது.

அஷ்ரப் ஏ சமத்

LEAVE A REPLY