வறிய மாணவர்களுக்கு சீருடைகளைத் தைத்துக் கொள்ள மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உதவி

0
149

மட்டக்களப்பு பூநொச்சிமுனை, அமீர்அலி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்கள் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகளைத் தைத்துக் கொள்வதற்கு இயலாத வறுமையில் இருப்பதால் அத்தனை மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைத் துணிகளைத் தைத்துக் கொடுக்கும் செலவை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் திங்களன்று பாடசாலை நிருவாகத்திடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் குறைபாடுகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காக பாடசாலைக்கு நேரடியாக 08.02.2016 அன்று விஜயம் செய்த அவர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மூலமும் பாடசாலையிலுள்ள குறைநிறைகளை அவர் கேட்டறிந்து கொண்டார்.

இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்கள் அடங்கிய தொகுப்புகளை பெற்றுக் கொள்வதற்குரிய முழு செலவீனங்களையும், அத்துடன் இப்பாடசாலையில் காணப்படுகின்ற தளவாட பற்றாக்குறையினை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக 2016ம் வருடத்தின் மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 50 ஆயிரம் ரூபாவினை வழங்குவதாகவும் அவர் பாடசாலை நிருவாகத்திடம் வாக்குறுதியளித்தார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY