யோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள்

0
172

கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணையை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்ளோ தலையிடவோ அழுத்தம் பிரயோகிக்கவோ மாட்டார்கள் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமையை கருத்திற் கொண்டே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை புலனாய்வு பிரிவிற்கு ஏற்பட்டது. இது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கா%E