ஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் :3 மாதங்கள் தடை

0
156

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் வீரர் யாசீர் ஷாவிற்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது.

அப்போது நவம்பர் 13 ஆம் திகதி யாசீர் ஷாவின் சிறுநீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. அவரது சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில் குளோர்டாலிடோன் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

ஐ.சி.சி.யின் ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் குளோர்டாலிடோன் ஊக்கமருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாசீர் ஷா இதை பயன்படுத்தியதால் அவரை ஐ.சி.சி. தற்காலிக நீக்கம் செய்யது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

அப்போது நடைபெற்ற விசாரணையில் அவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையால் பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யாசீர் ஷாவால் டி20 ஆசியக்கிண்ணம் மற்றும் டி20 உலகக்கிண்ணத்தில் கலந்து கொள்ள முடியாது.

அதன்பின் யூன் மாதம் இங்கிலாந்து தொடரில்தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY