அனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும் :சிரிய வெளி­நாட்டு அமைச்சர்

0
196

சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யில்­லாமல் அந்­நாட்­டுக்குள் பிர­வே­சிக்கும் வெளிநாட்டுப் படை­வீ­ரர்கள் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும் என சிரிய வெளி­நாட்டு அமைச்சர் வாலித் அல் – முயல்லம் எச்­ச­ரித்­துள்ளார்.

சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கையில் சவூதி அரே­பி­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள் ளார்.

சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான மோதலில் ஈடு­பட்­டுள்ள அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­களும் கிளர்ச்சிக் குழுக்­களும் அனு­ம­தி­ய­ளித்தால் தான் சிரி­யா­வுக்கு தனது தரைப்­ப­டையை அனுப்பத் தயா­ராக இருப்­ப­தாக சவூதி அரே­பியா அறி­வித்­த­மைக்கு இரு நாட்­க­ளி­லேயே சிரிய வெளி­நாட்டு அமைச்­சரின் இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

“சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி தரை வழி­யாக மேற்­கொள்­ளப்­படும் எந்­த­வொரு தலை­யீடும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே கரு­தப்­படும். அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்கள் சவப்பெட்டியிலேயே தமது நாடுகளுக்குத் திரும்ப நேரிடும் என்பதை நான் இங்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.

LEAVE A REPLY