கிரிக்கட் இறுதிப்போட்டியில் பிரதம அதீதியாக சிப்லி பாரூக்

0
169

காத்தான்குடி அல்-பலாஹ் விளையாட்டுக்கழகத்தின் 8ம் ஆண்டின் நிறைவினை ஒட்டி நடாத்தப்பட்ட அணிக்கு ஆறு பேர் ஐந்து ஓவர்களை கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து சிறப்பித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் 07.02.2016 ஞாயிற்று கிழமை மாலை இடம் பெற்ற பதினாறு அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு அல்-அக்ரம் விளையாட்டு கழகமும் அல்-பலாஹ் விளையாட்டு கழகமும் தெரிவாகி முதலில் துடுபெடுத்தாடிய அல்-பலாஹ் விளையாட்டுக் கழகம் ஐந்து ஓவர்களில் 48 ஓட்டங்களை வெற்றி இலக்காக அல்-அக்ரம் விளையாட்டு கழகத்திற்கு நிர்ணயித்ததோடு அல்- அக்ரம் விளையாட்டுக் கழகம் கடைசிப்பந்தில் ஐந்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசிப் பந்தினை சிக்சராக மாற்றி சாம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY