கிரிக்கெட் உலக கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி

0
263

icc_19_1பங்களாதேஷ், டாக்காவில் நடைபெற்று வரும் காலிறுதிக்கான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் இன்று இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும், போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடிய நிலையில்

சகல விக்கெட்டுகளையும் இழந்து 49.2 ஓவரில் 184 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணிக்காக CJ டெய்லர் அதிகூடிய 42 ஓட்டங்களை பெற்றார், எனினும் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

184 ஓட்டங்களை வெற்றி இல்லக்காக கொண்டு இலங்கை அணி 35.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவிஷ்க பெர்னாண்டோவும் கெவின் பண்டாரவும் முதல் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.

இலங்கை இன்னின்க்சுகாக அவிஷ்க பெர்னாண்டோ அதிகூடிய ஓட்டங்களாக 95 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகனாக தெரிவு செய்யபட்டார். இதன் முலம் இலங்கை அணி எதிர்வரும் 9ம் திகதி இந்தியாவிற்கு எதிராக அரை இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்றது.

LEAVE A REPLY