அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விசாரணைக்கு அழைப்பு

0
211

இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 9ம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இவர் சிவில் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

அக் காலப் பகுதியில் ஶ்ரீ லங்கன் கென்டரின் நிறுவனம் மற்றும் ஶ்ரீ லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

-AD-

LEAVE A REPLY