வட கிழக்கில் காணமல் போனோர் தொடர்பாக ஐ.நா அதிக கவனம் செலுத்தி வருகின்றது: செய்த் அல் ஹுசைன்

0
206

வட கிழக்கில் காணமல் போனோர் தொடர்பாக ஐ .நா. மனித உரிமை இஸ்தாபனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது புதிய அரசு வேண்டிய கவனம் செலுத்துவதற்கு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் நாம் வழங்குவோம் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்த் ராப் அல் ஹுசைன் தெரிவித்தாக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். .

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேட்கொண்டிருக்கும் ஐ .நா. மனித உரிமையாளர் ஹுசைன் அவர்கள் திருகோணமலைக்கு இன்று வருகை தந்த அவருடைய குழுவினரும் கிழக்குமாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் முதலமைச்சர் தெரிவிக்கையில், தற்போதைய புதிய அரசாங்கத்தில் நாம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம் இதன் மூலம் காணமல் போனோர் விடயத்தில் இலங்கை அரசு ஒரு தீர்மான முடிவை எடுக்கும் என நம்புகிறோம் அதற்கு வேண்டிய வலியுறுத்தல்களை உரியவர்கள் மூலம் தெரியப்படித்தியுள்ளோம் எனவும் முதலமைச்சர் கூறினார்.

இவை மட்டுமன்றி கிழக்கிலும் வடக்கிலும் உள்ள விதவைகளின் பாரிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் அது போலவே இன்னும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அதிக கவனம் காட்டி வருவதோடு மாகாண சபையின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் அக்கரை கொண்டவர்களாக காணப்படுகின்றோம். குறிப்பாக நிதி விவகாரத்தில் பாரிய முன்னேற்றல்கள் கொண்டு வரப்பட வேண்டும். கிழக்கு அபிவிருத்தியில் புதிய திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணம் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குவது சந்தோசம் தரும் விடயமென ஆணையாளர் தெரிவித்ததாக முதலைச்சர் கூறினார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் முதலீடு,வேலைவாய்ப்பு ,சம்பூர் மீள் குடியேற்றம் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களின் குடியேற்றம் போன்ற விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.

இக்கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, சுகாதார அமைச்சர் நசீர், விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி மற்றும் சபை தவிசாளர் சந்திரதாச கலபதி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தார்கள்.​

LEAVE A REPLY