மைக்றோன் 20 இற்கும் குறைந்த பொலித்தீன் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
175

மைக்றோன் 20 இற்கும் குறைந்த எடையில் பொலித்தீன் விற்பனையில் ஈடுபட்ட 07 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மத்திய சுற்றாடல் அதிகார சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளை அடுத்து குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மைக்றோன் 20 இற்கும் குறைந்த எடையில் பொலித்தீன் விற்பனை தொடர்பில் மாவட்ட மட்டத்தில் நாளை (08) முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மைக்றோன் 20 இற்கும் குறைந்த எடையில் பொலித்தீன் விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-NF-

LEAVE A REPLY