இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று 111 திறந்த போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டும்: மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம்

0
306

அண்மையில் இலங்கை நிருவாக சேவையில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த போட்டிபரீட்சைக்கான விண்ணப்பங்கள் இலங்கையின் 15.01.2016ம் திகதியில் 1950ம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 22வயதிலிருந்து 28வயதிற்கு உட்பட்டவர்களே விண்னப்பிக்க முடியும் என்று காணப்படும் நிபந்தனையானது பல ஆர்வமுள்ள இளம் பட்டதாரிகளை பாதித்துள்ள அதே வேலை 2015ம் ஆண்டுக்கான இலங்கை நிருவாக சேவை தரம் மூன்றிற்கான ஆட்சேர்ப்பு 2016ல் இடம்பெறுகின்ற காரணத்தினால் உச்சபட்ச வயதெல்லையாக 28 விதிக்கப்பட்டிருப்பது பலபட்டதாரிகளுக்கு இரண்டாவது தடவையாக தோற்றும் இறுதி சந்தர்ப்பத்தினை இழக்கச் செய்கின்றது என்பதனாலும், இது மனித உரிமை மீறலாக கருதப்பட கூடியது என்பதனாலும், பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பாக மட்டக்களப்பு வேலையற்ற மாவட்ட பட்டதாரிகள் இவ்வயதெல்லையினை 30தாக அதிகரித்து தருமாறும் கல்வி நிறுவாக சேவைக்கான வயதெல்லையினை 32ஆக அதிகதிரித்து தருமாறும் பிரதமரின் கவனத்திற்கும் எழுத்து மூலமக கொண்டுவந்திருந்தனர்.

மேலும், பின்வரும் காரணங்களை அதற்கான நியாயங்களாக முன்வைக்கின்றனர். இலங்கையில் 21வயதில் பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமொருவருக்கு பட்டம் முடித்து வெளிவர 26வயதினை அடைய வேண்டியுள்ளது. பலகலைகழகங்களினுல் இடம் பெறும் குழப்பங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் காரணமாக அதிலிருந்து இலங்கை நிறுவாக சேவைக்கான விண்ணப்பங்கள் கோறப்படும் வரை காத்திருக்கும் பொழுது 28 வயதினை அடைந்துவிடுக்கின்றனர்.

மேலும் 1988 தொடக்கம் 1994 வரையிலான காலப்பகுதிக்குள் இப்பரீட்சைக்கு விண்ணப்பைக்க முடியும். அதேவேலை 1988 தொடக்கம் 1994 என்ற இந்த காலப்பகுதிக்குள் வடகிழக்கில் மோதல்கள் உக்கிரமடைந்திருந்ததன் காரணமாக பிறப்பு வீதம் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இதனால் வடகிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து விண்ணப்பிக்கும் அளவு குறைவடைய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

2016.01.01 வர்த்தமாணியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான வயதெல்லை 30தாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதேவேலை இலங்கை நிருவாக சேவைக்கு மாத்திரம் 28என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகவேதான் இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று திறந்த போட்டி பரீட்சைக்கான உச்சபட்ச வயதெல்லையினை 30தாக அதிகரித்து தருமாறு பட்டதாரிகள் பிரதமரையும் அரசாங்கத்தினையும் கேட்டுக்கொள்கின்றனர். அத்துடன் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான விண்ணப்பங்கள் 2012ம் ஆண்டுக்கு பின்னர் 2016ம் ஆண்டிலேயே கோரப்பட்டுள்ளமையினால் 30வயதினை அடைந்த பட்டதாரிகள் இரண்டாவது முறையாக தோற்றுவதினை தடுக்கின்றது. எனவே இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான வயதெல்லையினை 32ஆகவும் அதிகரித்து தருமாறு வடகிழக்கில் உள்ள பட்டதாரிகளின் வேண்டுகோளாக இருப்பதாக மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுக்கின்றது.

பொறுத்தமான சீர்திருத்தங்களாக இலங்கை நிருவாக சேவைக்கான வயதெல்லையினை 30ஆகவும் இலங்கை கல்வி சேவைகான வயதெல்லையினை 32ஆகவும் அதிகரித்து வழங்குமாறு ஒட்டுமொத்த பட்டதாரிகளின் சர்பாகவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது கோரிக்கைக்கு தலை சாய்ப்பீர்கள் என இந்த நல்லாட்சி அரசினையும் பிரதமரையும் நம்புகிறோம் எனற கருத்துப்பட அவர்களுடைய கோரிக்கைகள் அமைந்திருந்தது.

– அஹமட் இர்ஸாட்-

LEAVE A REPLY