இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்: VTM முபாறக்

0
122

நிதி மோசடி விசாரணை பிரிவினை கலைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் கூறுவதை நான் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் VTM முபாறக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வந்த ஊழல் நிறைந்த ஆட்சியை மிக நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் மக்கள் தேற்கடித்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். அந்த நல்லாட்சியை மக்கள் ஏற்படுத்தியதன் நோர்க்கம் கடந்த காலத்தில் மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மக்களும் நாட்டின் நல்லாட்சியை விரும்பும் பாராளமன்ற உறுப்பினர்களும், சட்டத்துரை சார்ந்தவர்களும், ஏன் பல்வேறுபட்ட தொழில் சங்கங்களும், ஊழலுக்கு எதிரான பல அமைப்புக்களும் நல்லாட்சி அரசிற்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்தன அதன் அடிப்படையில் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் சட்டத்துரையில் முதிர்ச்சி பெற்றவர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட நிதி மோசடி விசாரணை பிரிவினை உடனடியாக கலைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் கோருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தற்போதைய இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்சி வேறுபாடுகள் இன்றி குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது இதற்கு கடந்த கால சம்பவங்கள் உதாரணமாகும் இதனை நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள் ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பலர் உண்மைக்குப் புரம்பாக குற்றம் சுமத்தப்பட்டு அநீதியாக தண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத இராஜாங்க அமைச்சர் இன்று குற்றவாளிகளை விசாரணை செய்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க கூடாது என நிதி மோசடி விசாரனை பிரிவை கலைக்க கோருவது யாரோ சில குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு காட்டுகின்ற விசுவாசமேயாகும்.

எனவே தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாரான பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என பல அர்ப்பணிப்புக்கு மத்தியில் செயலாற்றும் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் நிதி மோசடி விசாரணை பிரிவின் காரியாலயங்களை மாவட்ட மட்டதில் அமைத்து ஊழலுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாலிகளை சட்டத்தின் முன்நிறுத்தி மக்கள் வழங்கிய ஆணையை பொறுப்போடு நிறைவேற்றி தண்டனை பெற்றுக்க கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜுனைட்.எம்.பஹ்த்

LEAVE A REPLY