மாகாண நிதி கோவையை முழுமையாக பயன்படுத்த உதவிகள் செய்வோம்: சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்

0
145

மாகாண நிதி கோவையை முழுமையாக பயன்படுத்தவும் அதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கிழக்கு அபிவிருத்தியில் முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் நெதர்கூன் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தெரிவித்தார் .

இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கடந்த 05.02.2016 அன்று சுவிஸ் நாட்டின் தூதுவராலயத்தில் சந்தித்திருந்தார் . இதன் போதே சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் நெதர்கூன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் .

மேலும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலா சார்ந்த துறை பயிற்சிகள் வழங்குவதற்கு தொழிநுட்ப பயிற்சி நிறுவனங்களை அமைத்து தருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறினார் .

மேலும் மே மாதமளவில் சகல முதலமைச்சர்களையும் சுவிஸ் நாட்டுக்கு அழைத்து அங்குள்ள தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க கூடிய துறைகளை பார்வையிட்டு அத்துறைகளை இலங்கையில் செய்வதற்கு உரித்தான வாய்ப்புகளை அமைத்து கொடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அவர் முதலமைச்சரிடம் கூறினார்.

LEAVE A REPLY