தாலிக் கொடியைத் திருடி வங்கியில் அடகு வைத்தவருக்கு விளக்கமறியல்

0
160

4 பவுண் தாலிக் கொடியைத் திருடி வங்கியில் அடைவு வைத்ததாகக் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்ட சந்தேக நபர் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை 04.02.2016 மாலை கைது செய்யப்பட்ட இந்த நபரை ஏறாவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் நிறுத்தியபோது நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீடொன்றில் 4 பவுண் தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதான குடும்பஸ்தர் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி சீநோர் வீட்டுத் திட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது வீட்டிற்குள் புகுந்து அலுமாரியைத் திறந்து அதனுள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பவுண் தாலிக் கொடியை திருடிச் சென்று செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடைவு வைத்திருப்பது தெரியவந்தது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY