காத்தான்குடி அல்லாஹ் சதுக்கத்திற்கு அருகாமையில் உள்ள வடிகான்களுக்கு வடிகான் மூடிகள் இடப்பட்டது.

0
172

காத்தான்குடி அல்லாஹ் சதுக்கத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருகின்ற ஆழமான வடிகான்கள் நீண்டகாலமாக மூடிகள் இடப்படாமல் காணப்பட்டது. இதனால் அவ்வீதியால் பயணிப்பவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல்வேறு வீதி விபத்துக்களையும் மக்கள் எதிர் நோக்கி இருந்தனர். எனவே அதனை சீர் செய்யும்படி அதற்குரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து அதற்கான நிரந்தர தீர்வாக இலங்கையின் 68வது சுதந்திரதினத்தன்று அப்பிரதேச வடிகான்களுக்கு வடிகான் மூடிகள் இடப்பட்டது. மேலும் காத்தான்குடி பஸ்மலா சதுக்க வீதியிலும் வடிகான் மூடி இடப்பட இருப்பதால் வடிகான் மூடி தயாரிக்கும் இடத்திற்கு சென்று நேரடியாக பார்வையிட்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபை செயலாளர் திரு. சர்வேஸ்வரன், மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY