தைவான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

0
157

தைவான் நாட்டின் தென்பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

தைவானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய பத்து மாத குழந்தை உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.

இடிப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்தது 100 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY