ஜிகா வைரஸ் காய்ச்சலுக்கு முதன்முறையாக கொலம்பியாவில் 3 பேர் பலி

0
152

கடந்த ஓராண்டாக உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ், கொலம்பியா நாட்டில் முதன்முறையாக 3 உயிர்களை பலி வாங்கி உள்ளது.

இதுகுறித்து கொலம்பியாவின் தேசிய சுகாதார நிறுவனம் (ஐஎன்எஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு முறையானது நரம்பு மண்டலத்தை தாக்கும். இதனால் உடல் பலவீனமாகும். சில நேரங்களில் உடல் செயலிழந்து போகும். குறிப்பாக கர்ப்பிணிகளை தாக்கினால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும்.

கடந்த ஆண்டு பிரேசிலில் முதன்முதலாக ஜிகா வைரஸ் அறிகுறி தென்பட்டது. இப்போது இது தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கிய கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தையின் தலை மிகவும் சிறிதாக காணப்பட்டது. அத்துடன், மூளையில் பாதிப்பு மற்றும் இதர பிறவிக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஜிகா வைரஸ் தாக்குதலால் முதன்முறையாக 3 பேர் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY